மொழியாக எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை வரலாறாய் ஆக்கும் தலைவனின் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதிமொழியாக எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை வரலாறாய் ஆக்கும் தலைவனின் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி
இனிமேலும் ஓயோம் உறுதி
Posted by
♥ தூயா ♥ Thooya ♥
at
0
comments
Links to this post
சில 'பிரபல' பதிவர்களும், விவசாயமும் (அதிரடி பதிவு)

நம்மள சுத்தி இருக்கிற பதிவர்களில் பலர் நிலத்தை வாங்கி போட்டு விவசாயம் பண்ண தொடங்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அட மொக்கை பதிவு போட்டடே காலம் தள்ளுற (என்னைப்போன்ற..கிகிகி) பதிவர்களே இப்படி புத்திசாலித்தனமா விவசாயம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களேன்னு, நானும் கொஞ்ச நிலத்தை வாங்கி போட்டிருக்கேன்.
நாம தான் விவசாயத்துக்கு புதுசாச்சேன்னு நம்ம மொக்கை விவசாயி...ச்ச் சாரி நம்ம சஞ்சய் விவசாயி நிலத்துக்கு போனா, அங்கு பயிர் எல்லாம் காஞ்சு போய் கிடக்கு. என்ன கொடுமை சஞ்சய்? கிராமத்துக்கு என்று தனி வலைப்பூ வைத்தால் மட்டும் போதுமா? பயிர் செய்ய தெரிய வேண்டாமா??
சரி சஞ்சய் போனால் என்ன, அவரோட நெருங்கிய நண்பர் என்னோட ஜோசப் அண்ணா நிலத்துக்கு போனேன். அட கொடுமை கொடுமைனனூ கோயிலுக்கு போனா, அங்க ஒரு கொடுமை நாக்கு முக்கா ஆடிட்டில்ல இருக்கு. பின்ன, ஒரு ஊருக்கே தானியம் தரலாம் போல!! இதில மூன்று யானைய வேற கட்டி போட்டிருக்கார்...சிங்கையில இது தான் வேலை போல..
கானாஸ் நிலத்தை பத்தி சொல்லவே வேண்டாம். ஏதோ பாட்டு போட்டதுக்காக அவரோட ரசிகர் யாரோ நிலத்தை எழுதி வச்சிட்டாங்களாம். அட கழுதைக்கு (சாரி கானாஸ்)தெரியுமா கற்பூர வாசனை.கிகிகி என்னிக்கோ நட்ட ஸ்டோபரி மரம் கருவாடா போய் கிடக்கு. கானாட்ட பாட்டை தான் எதிர்பார்க்கணும், பயிரை அல்ல
அடுத்து என் பெரிய பங்கு (வந்தியத்தேவன்) நிலத்து போய் பார்த்தேன். அப்புறம் தான் தெரிஞ்சுது போகாமலே இருந்திருக்கலாம் என. பின்ன என்ன, நட்டதே நாலு ஸ்டோபரி. அதில பாதி காஞ்சு போய்டிச்சு. மீதிக்கு தான் பக்கத்தில ஒரு பசுவை கட்டி போட்டிருக்காரே. ம்ம்கும் பங்கை பார்த்து எங்க நான் விவசாயம் பண்ண?
சரி அடுத்து ஒரு பொம்பளபிள்ளை நிலத்துக்கு போகலாம்னு நினைச்சிட்டு, இயற்கையின் விவசாயத்தை பார்க்க போனேன். என்ன சொல்லுங்க, பொண்ணுங்க பொண்ணுங்க தான். அழகா நிலத்தை வடிவமைத்து....இவங்கள முதல்லயே பார்த்திருக்கலாம்னு தோணுது இப்போ..
ரொம்ப முக்கியமான விசயம் என்ன என்றால், நம்ம ஆசிப் அண்ணா தான் விவசாயத்தில முன்னுக்கு நிற்கிறார். ஒரு மனுசனுக்கு பேராசை கூடாது என்கிறேன்..போய் பாருங்க அவரோட நிலத்தை. தலை சுத்திடும். அண்ணா இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறார் என்று இப்போ தான் புரிஞ்சுது. ஒரு மனுசன் ஒரு யானை வளர்க்கலாம், சரி நாலு யானை வளர்க்கலாம்....ஆனால் காட்டில இருக்கிற அத்தனை யானையையும் புடிச்சிட்டு வந்து வளர்க்கிறது என்பது....என்னத்த சொல்ல..
இன்னும் சிலரோடத நீங்களே உங்க Facebook Farmville ல போய் பார்த்துக்குங்க. பதிவெழுத நேரம் இல்லைன்னு சொல்லிட்டு அந்த பக்கமா விவசாயம் எல்லோ பண்ணிட்டு இருந்திருக்காங்க இவங்க..பிடிச்சிட்டோம்ல..நாங்களும் நிலத்தை வாங்கி பயிர்பண்ண ஆரம்பிச்சாச்சு. யாருக்காச்சும் மரம், மிருகங்கள் வேணும்னா சொல்லுங்க..அனுப்பிடுவோம்ல ;)
இதில பெரிய கொடுமை என்ன என்றா, சில பேரு வச்சிருக்கிறதே நாலு காஞ்சு போன செடி. சரி என்ன தான் இருக்குன்னு அவங்க நிலத்தை பார்க்க போனா, காக்கா என் பயிரை எடுக்குது, விரட்டி விடுன்னு சொல்லுறாங்க. எலே காஞ்ச தோட்டத்துக்கு ஒரு காக்கா, அதை நாங்க விரட்டனுமா..
பி.கு:
1. பிரபல பதிவர்கள் என குறிப்பிட்டதற்காக எனக்கு ஒரு யானையை அனுப்புங்கன்னு கேட்க மாட்டேன்.
2. நான் யாரையும் மிரட்டி எனக்கு இன்று என்ன அனுப்பினிங்க? அப்படி கேட்பதேயில்லை.
3. பதிவின் தலைப்பு எப்படி ;)
கிகிகி வரட்டா ;)
Posted by
♥ தூயா ♥ Thooya ♥
at
45
comments
Links to this post
Labels: அனுபவம், இயற்கை, பதிவர்வட்டம்
வந்தி & நயன்தாரா : வாழ்த்துகள்
என் பெரிய பங்கு வந்தியோட வலைப்பூ ஆக்கம் ஒன்று இலங்கை பத்திரிகை (thinakural.com) ஒன்றில் பிரசுரிக்கப்படுள்ளது. பங்கை வாழ்த்த அனைவரையும் அழைக்கின்றேன். [வராதவர்களுக்கு என் சமையல்கட்டில் இருந்து டின்மீன் கறி அனுப்பி வைக்கப்படும்]
ஆக்கத்தை வந்தியின் வலையில் காண:: க்ளிக். பத்திரிகையில் வந்த ஆக்கத்தின் படங்கள் கீழே:

வந்தி & நயன் என்றவுடன் பொறாமையில் வந்தவர்களுக்கு: கிகிகிகிகிகிகி
Posted by
♥ தூயா ♥ Thooya ♥
at
25
comments
Links to this post
Labels: பதிவர்வட்டம், வாழ்த்துக்கள்
தாதா கிளியும் நானும்
கடந்த 15 நாட்களாக தினமும் 15 மணித்தியாலங்கள் 'வேலை செய்து' (நம்ப மாட்டீங்களே) இன்று தான் ஓய்வு கிடைத்தது. வேலைக்கு போகும் தினங்களில் கடமை போல காலை நடை ( morning walk இது தானே தமிழில்?) செல்வதுண்டு. மனம் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாலும், புத்தி ஏனோ அன்றைய வேலையை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடும். இன்று தான் விடுமுறை தினமாயிற்றே, காலையில் நடக்க சென்ற போது தான் கீழே படத்தில் இருப்பவரை சந்தித்தேன். அழகு தான் இல்ல? என்னை பார்த்து ஒரு முறைப்பு வேறு. பறக்க முதல் ஒரு படம் எடுக்கலாம் என முயற்சித்தேன். "Say cheese, say butter, say milk" என என்ன சொன்னாலும் இந்த கிளி சிரிக்கவே மாட்டேன்னுட்டுது. என்னை பார்த்து "ஏய் தூயா,உன் கமெராவ எடுத்திட்டு ஓடி போய்டு..கொன்னுடுவேன்" அப்படின்னுற போலவே ஒரு பார்வை. தனிய இருக்கேன்னு இம்புட்டு தகிரியமா படம் எடுத்தேன். இது தான் வந்தது. படம் எடுத்ததும் ஒரே ஓட்டமா ஓடி வந்திட்டேன். அந்த கிளி வேற "ஏய் மயிலு, குயிலு, ரயிலு இங்க வாங்கடி யாரோ என்னைய படம் புடிக்கிறாள்" அப்படின்னுட்டுதுன்ன, என் நிலை என்னாவது. இந்த கிளியே ஒரு குண்டு தாதா ரேஞ்சில இருக்கு!
Posted by
♥ தூயா ♥ Thooya ♥
at
13
comments
Links to this post
Labels: அனுபவம், பொழுதுபோக்கு

